அல்ஜீரியாவில் 20 ஆண்டுகளாக அதிபராக இருந்துவந்த அப்தெலாசிஸ் பவுடேபிலிகாவுக்கு வயது 82. 2013ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அரசு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்துவந்தார். இந்நிலையில், ஐந்தாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த அப்தெலாசிஸுக்கு, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. மக்களின் விருப்பத்திற்கு இணங்க அதிபர் பதவியிலிருந்து அப்தெலாசிஸ் விலக வேண்டும் என அந்நாட்டு ராணுவ தளபதி அஹ்மத் கெயிட் சலா தெரிவித்திருந்தார். நாட்டில் நடைபெறும் போராட்டத்தை உணர்ந்த அப்தெலாசிஸ் பவுடேபிலிகாவுக்கு அதிபர் பதவிலிருந்து விலகினார்.
அல்ஜீரியாவில் புதிய இடைக்கால அதிபருக்கு எதிரான போராட்டத்தில் தள்ளுமுள்ளு - அல்ஜீரியா
அல்ஜியர்ஸ்: அல்ஜீரியாவின் இடைக்கால அதிபராக பதவியேற்ற அந்நாட்டு சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, அல்ஜீரியா அரசியல் அமைப்பின்படி, 90 நாட்களுக்கு இடைக்கால அதிபராக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அப்துல்காதல் பென்சிலா பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், 90 நாட்களுக்குள் நியாயமான தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், தலைநகர் அல்ஜியர்ஸில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால அதிபர் அப்துல் காதல் பென்சிலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.