ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தொடக்க தினத்தை (மே 22) முன்னிட்டு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உரையாற்றினார்.
அப்போது, "ஆப்பிரிக்க ஒன்றியத்தின் செயல் திட்டம் 2063இன் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals) அடையும் திட்டங்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று இடையூறாக அமைந்துள்ளது. இந்த நேரத்தில், சர்வதேச நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆப்பிரிக்க ஒன்றியம் பணிக்குழு ஒன்றையும், சிறப்புத் தூதர்களையும் நியமித்துள்ளது.