தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜிம்பாப்வேயின் இடய் புயல் ஒரு 'பெரும் பேரழிவு' - ஐ.நா. - Zimbabwe

ஜெனிவா: ஜிம்பாப்வேயில் பெய்துவரும் பெருமழையால் உருவான 'இடய்' புயல் ஏற்படுத்திய அழிவானது, ஒரு 'பெரும் பேரழிவு' என்று ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

ஜிம்பாவே

By

Published : Mar 20, 2019, 12:18 PM IST

ஆப்ரிக்காவின் தென் பகுதிகளான ஜிம்பாப்வே, மொசாம்பிக், மாலாவீ பகுதிகளில்'இடய்' புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழை பெய்துவருகிறது.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனி விமானத்தில் பார்வையிட்ட அந்நாட்டு பிரதமர் ஃபிலிப்ஸி யூஸி, 'இதுவரை 84 உயிரிழப்புகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது, ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கும்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்ககூடும்' என்றார்.


இந்நிலையில் நேற்று ஐ.நா.வின் வானிலை மைய அலுவலர் கிளார் நல்லிஸ், இந்த புயலானது பெரும் பேரழிவாக உருவெடுத்து வருகிறது என்றார்.

இந்த இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை கொண்டு செல்வதில் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புயலினால் இதுவரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுள்ளனர், ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ABOUT THE AUTHOR

...view details