தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தேவாலயத்தில் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் பலி! - ஆறுபேர் பலி

சில்கட்ஜி: புர்க்கினா பாசோ நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தூப்பாக்கிச் சூட்டில் ஆறுபேர் பலியாகினர்.

துப்பாக்கிச் சூடு

By

Published : May 13, 2019, 12:09 PM IST

புர்க்கினா பாசோ நாட்டின் சில்கட்ஜி பகுதியில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் இன்று காலை உள்ளூர் நேரப்படி சுமார் 9 மணியளவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், கிறிஸ்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் ஆறுபேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்நாட்டு பாதுகாப்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயத்தில் மனித வெண்டு தாக்குதல் நடந்து 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details