நியாமே (நைஜர்): ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்ள சந்தையொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்தனர்.
நைஜர் துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் உயிரிழப்பு! - ஐஎஸ்
நைஜரில் உள்ள சந்தையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
attack on Niger market sellers Niger attack attack on civilians in Niger shootings in Niger நைஜர் துப்பாக்கிச் சூடு ஐஎஸ் துப்பாக்கிச் சூட்டில்
இதில் சந்தையில் இருந்த 58 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது போன்ற தாக்குதல்களை பொதுவாக ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திவருவார்கள். எனினும் தற்போதுவரை இந்தத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக கடந்தாண்டு ஜனவரி மாதம் தில்லேபெரி பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 90 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நாட்டில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.