தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எகிப்து அதிபர் பதவியில் இருப்பதற்கு வழிவகை செய்யும் சட்டத்திருத்திற்கு மக்கள் ஆதரவு! - president rule

கெய்ரோ: எகிப்து அதிபர் அல்-சிசி 2030ஆம் ஆண்டு வரை பதவியில் இருப்பதற்கு வழிவகை செய்யும் சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் பொது வாக்கெடுப்பில் 88 விழுக்காடு மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அதிபர் பதவியில் இருப்பதற்கு வழிவகை செய்யும் சட்டத்திருத்திற்கு மக்கள் ஆதரவு

By

Published : Apr 24, 2019, 9:44 AM IST

எகிப்து அதிபராக முதல் முறையாக அல்-சிசி கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் 97 விழுக்காடு வாக்குகள் பெற்று மீண்டும் அதிபரானார். இந்நிலையில், மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் தொடர்வது, மேலும் ஆறு ஆண்டுகள் பதவியில் நீடிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

596 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 531 பேர் இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எனினும், பொதுமக்களின் கருத்து கேட்கும் வாக்கெடுப்பு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது.

இந்த பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்க 25 லட்சம் பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில், 88 விழுக்காடு, அதாவது 23 லட்சத்து 40 ஆயிரம் பேர் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன்மூலம், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அல்- சிசி அதிகாரத்தை தவறவதாக பயன்படுத்திவருவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details