ஆப்பிரிக்காவின் வடபகுதியில் உள்ள நாடு அல்ஜீரியா. நான்குமுறை பதவியில் இருந்த இந்நாட்டு அதிபர்அப்தெலாசிஸ் பவுடேபிலிகா, தேர்தலை நடத்தாமல் பதவிக் காலத்தை நீட்டித்துவந்தார்.
இதனையடுத்து 5ஆவது அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், அப்தெலாசிஸ் பவுடேபிலிகா சிகிச்சைக்காக வெளிநாடு சென்று விட்டார். இதனால், நாட்டில் சில அரசு இயந்திரங்கள் முடங்கியது. மேலும், அப்தெலாசிஸ் பவுடேபிலிகா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் வெடித்தது. அதனால் வரும் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
இருந்தும், தேர்தல் அறிவிக்காமல் தாமதப்படுத்தும் அதிபர் அப்தெலாசிஸ் பவுடேபிலிகா அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மீண்டும் போராட்டம் வெடித்தது.