ஆப்பிரிக்கா நாடான அல்ஜீரியாவில் 20 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் அப்தலசீஸ் பூத்தஃபீலிகாவுக்கு வயது 82 ஆகும். 2013ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அரசு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், ஐந்தாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த அப்தலசீஸூக்கு, எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்று வருகிறது.
பதவி விலகும் அல்ஜீரியா அதிபர்! - resign
அல்ஜீரியர்ஸ்: அல்ஜீரியாவில் அதிபர் அப்தலசீஸ் பூத்தஃபீலிகாவுக்கு எதிராக போராட்டம் வலுபெற்றுள்ளதால், அதிபர் பதவியிலிருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களின் விருப்பத்திற்கு இணங்க அதிபர் பதவியிலிருந்து அப்தலசீஸ் விலக வேண்டும் என அந்நாட்டு ராணுவ தளபதி அஹ்மத் கெயிட் சலா என தெரிவித்திருந்தார். இந்நிலையில், போராட்டத்தின் தாக்கத்தை உணர்ந்த அதிபர் அப்தலசீஸ் பூத்தஃபீலிகா ஓரிரு நாட்களில் பதவி விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு துணை பாதுகாப்புத்துறை அமைச்சர் சாலாஹ, " இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு அரசியலமைப்பின்படி தீர்வு காணப்படும்" என்றார்.