ஆஃபிரிக்கா நாடான அல்ஜீரியாவில் 20 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் அப்தலசீஸ் பூத்தஃபீலிகாவுக்கு வயது 82 ஆகும். 2013ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அரசு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார்.
அல்ஜீரிய அதிபர் பதவி விலக வேண்டும் - ராணுவ தளபதி வலியுறுத்தல்! - அல்ஜீரியா அதிபர்
அல்ஜீயர்ஸ்: வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள அல்ஜீரியா அதிபர் அப்தலசீஸ் பூத்தஃபீலிகா பதவி விலக வேண்டும் என அந்நாட்டு ராணுவ தளபதி அஹ்மத் கெயிட் சலா வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஐந்தாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த அப்தலசீஸூக்கு எதிர்ப்பு தெரிவித்துநாடு முழுவதும் போராட்டம் வலுபெற்றுள்ளது.இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராணுவ தளபதி அஹ்மத் கெயிட் சலா, "தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கு முடிவுக்கு கொண்டுவர தீர்வ காணப்பட வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு இணங்க அதிபர் பதவியிலிருந்து அப்தலசீஸ் விலக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, புதிய பிரதமராக பதவியேற்றுள்ளநூறுடீன் பெடோய், அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால் வெற்றிகரமான அரசாங்கத்தை அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.