சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையனாது நாள்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 19ஆவது நாளாக, இன்றும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.18 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 77.29 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை ஆறு மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.