தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் இணையும் பகத் பாசில் - வடிவேலு கூட்டணி.. வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்! - சினிமா செய்திகள்

fahadh faasil-vadivelu combo:மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

fahadh faasil vadivelu combo
பகத் பாசில் வடிவேலு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 4:43 PM IST

சென்னை:மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து, கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், மாமன்னன். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் நடிகர் வடிவேலு ’மாமன்னன்’ கதாபாத்திரத்திலும், பகத் பாசில் ‘ரத்தினவேல்’ கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தனர். இதில் இருவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. மேலும் இருவரும் இணைந்து நடித்த காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில், மாமன்னன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த முறை தமிழ் சினிமாவின்‌ முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த கூட்டணி இணைந்து நடிக்கிறார்கள். ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 98வது படம் இதுவாகும்.

மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் பகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. மாமன்னன் படத்தை தொடர்ந்து பகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பயணத்தின்போது நடைபெறும் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியதாக இத்திரைப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வரும் ஜனவரி மூன்றாவது வாரத்தில், திருவண்ணாமலையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. மாமன்னன் படத்திற்குப் பிறகு, இருவரும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெண்ணை பற்றிய ஆணின் பார்வை..! கயல் ஆனந்தியின் மங்கை படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!

ABOUT THE AUTHOR

...view details