தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

SK 21 படக்காட்சி லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி! - சென்னை

sivakarthikeyan movie scene leak: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 21 வது படம் தொடர்பான சில காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

படக்குழு அதிர்ச்சி
எஸ்.கே 21 படக்காட்சி லீக்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 11:01 AM IST

சென்னை: சிவகார்த்திகேயனின் 21வது படம் தொடர்பான சில காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆன நிலையில், அதனை யாரும் சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டாம் என சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து படிப்படியாக முன்னேறி, தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம், மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து, தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது படம் உருவாகி வருகிறது. இதனை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ரங்கூன் படம் மூலம் கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி, இப்படத்தை இயக்குவது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், மாவீரன் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இதுவாகும். ராணுவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.

இதையும் படிங்க: மும்பை சாலையில் மதுபோதையில் தள்ளாட்டம் - நடிகர் சன்னி தியோல் கொடுத்த விளக்கம்!

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின்‌ படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி ஒன்று லீக் ஆகி உள்ளது. இவ்வாறு படக் காட்சி லீக்கானதை அறிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து காட்சிகள் எப்படி வெளியானது என படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. மேலும், இது குறித்து படக்குழு விசாரித்து வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் அயலான் திரைப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஏலியன் தொடர்பான அறிவியல் கதையான இப்படத்தை, இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இதையும் படிங்க: அலட்சியம், பேராசை - தமிழக அரசை கடுமையாக சாடிய சந்தோஷ் நாராயணன்!

ABOUT THE AUTHOR

...view details