தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீரா மிதுன் போல் ஒருவரை வைத்துக் கொண்டு படப்பிடிப்பை முடித்தது பெரிய விஷயம்- தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! - meera mithun

மீரா மிதுன் போல் ஒருவரை வைத்துக் கொண்டு படப்பிடிப்பை முடித்தது மிகப்பெரிய விஷயம் என பேய காணோம் பட தயாரிப்பாளர் ஆர். சுருளிவேல் தெரிவித்துள்ளார்.

மீரா மிதுன் ஸ்டாலினுடன் இணைந்து முதல்வர் ஆவதை நான் கெடுப்பதாக புகார் சொன்னார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!
மீரா மிதுன் ஸ்டாலினுடன் இணைந்து முதல்வர் ஆவதை நான் கெடுப்பதாக புகார் சொன்னார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

By

Published : Jun 29, 2022, 10:30 AM IST

சென்னை : குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிப்பில் இயக்குநர் செல்வ அன்பரசன் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் " பேய காணோம் ". தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே படத்திற்கு வெற்றிவிழாவை படக்குழு முதன்முறையாக கொண்டாடியுள்ளது எனலாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. கரோனா நோய்த் தொற்றுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட இப்படம், பல இன்னல்கள் தடைகளைக் கடந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடித்துள்ளது. பல சிக்கல்களை கடந்து படப்பணிகள் முடிக்கப்பட்டதை படக்குழு வெற்றி விழாவாகக் கொண்டாடியது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் R. சுருளிவேல் பேசுகையில் “இயக்குநரை பல காலமாக தெரியும். அவரின் திறமையை கண்டு நீங்கள் படம் செய்யலாமே எனக் கேட்டேன். நல்ல தயாரிப்பாளர் அமைய வேண்டும் என்றார். நானே தயாரிக்கிறேன் என கூறினேன். அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. இயக்குநர் செல்வ அன்பரசன் இப்படத்திற்கு நாயகியாக மீரா மிதுனை தேர்வு செய்யலாம் என்றார். ஆனால் அவர் பற்றி பொதுவில் நல்ல அபிப்ராயங்கள் இல்லை அதனால் வேண்டாம் என்றேன். ஆனால் இயக்குநர் அவர் பொருத்தமாக இருப்பார். படத்திற்குப் பலமாக இருக்கும் என்றார். நானும் சரி என்றேன்.

மீரா மிதுன் ஸ்டாலினுடன் இணைந்து முதல்வர் ஆவதை நான் கெடுப்பதாக புகார் சொன்னார் - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

ஆனால் அவர் வந்த போது பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். இயக்குநர் மீதே குற்றச்சாட்டு கூறினார். படப்பிடிப்பில் பாதியில் கிளம்பிப் போய் விடுவார். திடீரென டில்லியில் இருக்கிறேன். விமான டிக்கெட் போட்டால் தான் வருவேன் என்பார். இதுபோன்று அவர் நிறைய தொல்லைகள் தந்தார் என தெரிவித்தார்”.

மேலும் பேசிய அவர் “முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து அவர் முதல்வர் ஆவதை நான் தடுப்பதாக என் மீதும் குற்றம் சுமத்தினார். படம் பாதி எடுக்கப்பட்டு விட்டதால் அவரை மாற்ற முடியவில்லை, அவரை போன்ற ஒருவரை வைத்துக் கொண்டு இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தது மிகப்பெரிய விஷயம். இப்படத்திற்குப் பல தடைகள் வந்தது. அதையெல்லாம் கடந்து படத்தை முடித்துள்ளோம். அதற்காக தான் இந்த வெற்றி விழா.

மேலும் எங்கள் படம் நல்லதொரு காமெடி படமாக வந்துள்ளது. தற்போது திரையரங்குகளில் சிறு படங்களுக்கு இடம் கிடைப்பதில்லை. விக்ரம் படத்திற்கும் என் படத்திற்கும் ஒரே டிக்கெட் விலை என்பது அநியாயம். 50 ரூபாய் டிக்கெட் வைத்தால் என் படத்திற்கும் கூட்டம் வரும். இதை தயாரிப்பாளர் சங்கங்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படத்தை கடினாமாக உழைத்து உருவாக்கிய அனைவருக்கும் நன்றி" என தயாரிப்பாளர் R. சுருளிவேல் தெரிவித்தார்.

இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டீவி ஜேக்கப், செல்வகுமார் மற்றும் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details