திரைத்துறையில் பன்முகம் கொண்ட நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன்(69) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். பிரதாப் போத்தன் 1979ல் வெளிவந்த அழியாத கோலங்கள் என்கிற தமிழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதிலும் குறிப்பாக பாலு மகேந்திரா இயக்கிய மூடுபனி, மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே மற்றும் வறுமையின் நிறம் சிகப்பு ஆகிய திரைப்படங்களில் பிரதாப் போத்தன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
கமல்ஹாசனுடன் பிரதாப் போத்தன் நடித்த பேசும் படம் (உரையாடல்கள் இல்லாத படம்) மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பிரதாப் போத்தன் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய “மீண்டும் ஒரு காதல் கதை” சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றார். மேலும் ”கரையெல்லாம் செண்பகப்பூ” என்னும் சுஜாதாவின் நாவலை படமாக்கியுள்ளார்