தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“ஏன் நடிகர்களைப் பார்க்கும் ரசிகர்கள் பிரம்மிப்படைகிறார்கள்?” - கங்கனா ரணாவத் விளக்கம்! - news about Kangana

Kangana about stardom: பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ரசிகர்கள் பிரபலங்களை சந்திக்கும் போது ஏற்படும் உணர்வு குறித்து தன் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களின் கற்பனை உலகம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு
ரசிகர்களின் கற்பனை உலகம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 6:45 PM IST

சென்னை:பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், கங்கனா ரணாவத். இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கங்கனா ரணாவத், சமீபகாலமாக பாஜக தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவாக அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அவர் பொதுவாக தனது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது உண்டு. அந்த வகையில், இன்று (ஜன.07) தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ரசிகர்கள் பிரபலங்களைச் சந்திக்கும்போது தங்களுக்கு பெரிய அதிசயம் நடப்பது போல ரசிகர்கள் உணர்வதாகவும், ரசிகர்கள் அவ்வாறு வியந்து பார்க்கும்போது பிரபலங்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் சுனில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம்!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரசிகர்கள் பிரபலங்களை பொதுஇடங்களில் பார்த்து விட்டால் மிகுந்த வியப்புடன், நல்ல சகுனம் தங்களுக்கு கிடைத்ததைப் போல உணர்கின்றனர். மேலும், சில சமயங்களில் பேச முடியாமல் வார்த்தைகள் தடுமாறி அழுது விடுகின்றனர். சிலர் செல்ஃபி எடுப்பதற்கு முயற்சிப்பதும் உண்டு. ரசிகர்கள் நடிகர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளும்போது எங்களுக்கும் என்ன நடக்கிறது, அதை எப்படி எதிர்கொள்வது என தெரியாது” என கூறியுள்ளார்.

சினிமா நட்சத்திரங்கள் மீதான ரசிகர்களின் பார்வைகள் என்பது கற்பனைத்தன்மை நிறைந்ததாக உள்ளது என குறிப்பிடும் அவர், இது போன்ற ரசிகர்களின் உணர்வு தனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதை முன்கூட்டியே கணிக்கிறது இன்றைய தமிழக அரசு - ஸ்டாலின் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details