தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Kerala State Film Awards: மம்முட்டி சிறந்த நடிகர்.. நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படம்! - kerala film state awards

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 53வது திரைப்பட விருதுகள் விழாவில் மம்முட்டி சிறந்த நடிகாரகவும் நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படமாகவும் தேர்வு !

Kerala State Film Awards
Kerala State Film Awards

By

Published : Jul 21, 2023, 10:27 PM IST

திருவனந்தபுரம் :கேரளாவில் 53 ஆவது மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெங்காலி திரைப்பட தயாரிப்பாளர் கவுதம் கோஷ் தலைமையிலான இறுதி நடுவர் குழுவால் விருதுகள் முடிவு செய்யப்பட்டன. பட்டியலிடப்பட்ட மொத்த 154 படங்களில் 30 படங்கள் இறுதிப் போட்டியை எட்டின. விருதுகளைக் கேரளா மந்திரி சஜி செரியன் திருவனந்தபுரத்தில் அறிவித்தார்.

சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் மம்முட்டி பெற்றார். 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் ஜேம்சாக மிகச் சிறந்த நடிப்பிற்காக இந்த விருதைப் பெற்றார். மம்முட்டி சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதை வெல்வது இது 8 ஆவது முறையாகும்.

மற்ற விருதுகள்

  • சிறந்த படம்: நண்பகல் நேரத்து மயக்கம்
  • சிறந்த நடிகர்: மம்மூட்டி (நண்பகல் நேரத்து மயக்கம்)
  • சிறந்த நடிகை: வின்சி அலோஷியஸ் (ரேகா)
  • சிறந்த இயக்குநர்: மகேஷ் நாராயணன் (அறியிப்பு)
  • சிறந்த குணச்சித்திர நடிகர்:பி பி குஞ்சிகிருஷ்ணன் (ன்னா தான் கேஸ் கொடு)
  • சிறந்த குணச்சித்திர நடிகை: தேவி வர்மா (சவுதி வெள்ளக்கா)
  • பிரபலமான திரைப்படம்: ன்னா தான் கேஸ் கொடு
  • சிறந்த குழந்தைகள் திரைப்படம்:பல்லோட்டி 90'ஸ் கிட்ஸ்
  • சிறந்த கதை எழுத்தாளர்: கமல் கே.எம் (பதா)
  • சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் (ன்னா தான் கேஸ் கொடு)
  • சிறந்த திரைக்கதை (தழுவல்): ராஜேஷ் பின்னடன் (ஒரு தேக்கன் தள்ளு கேஸ்)
  • சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): எம் ஜெயச்சந்திரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு மற்றும் ஆயிஷா)
  • சிறந்த ஆண் பாடகர்: கபில் கபிலன் (பல்லோட்டி 90'ஸ் கிட்ஸ் திரைப்படத்தின் "கனவே" பாடலுக்காக
  • சிறந்த பெண் பாடகர்: மிருதுளா வாரியர் (பத்தொன்பதாம் திரைப்படத்தின் "மயில்பீலி இலக்குன்னு கண்ணா" பாடலுக்காக)
  • சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): டான் வின்சென்ட் (ன்னா தான் கேஸ் கொடு
  • சிறந்த படத்தொகுப்பாளர்: நிஷாத் யூசுப் (தல்லுமாலா)
  • சிறந்த ஒளிப்பதிவாளர்: மனேஷ் மாதவன் (எல வீழா பூஞ்சிரா) மற்றும் சந்துரு செல்வராஜ் (வழக்கு)
  • ஸ்பெஷல் ஜூரி மென்ஷன்(நடிப்பு) - குஞ்சாக்கோ போபன் (ன்னா தான் கேஸ் கொடு) மற்றும் அலென்சியர் லே லோபஸ் (அப்பன்)
  • ஸ்பெஷல் ஜூரி மென்ஷன் (இயக்கம்) - பிஸ்வஜித் எஸ் மற்றும் ரரீஷ்

இதையும் படிங்க :திரைச் சிதறல்: இந்த வார ரிலீஸ் படங்கள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details