கோப்ரா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக திரைப்பட குழுவினர்களான நடிகர் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி, மிர்னாலினி மற்றும் மீனாட்சி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்றிருந்தனர். கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய அவர்கள் மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதனையடுத்து கோவை கொடிசியா அரங்கம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விக்ரம், இந்த படம் அடிப்படையாகவே அருமையாக செதுக்கப் பட்டிருப்பதாகவும் மாறுபட்ட கதை எனவும் தெரிவித்தார். கதாப்பாத்திரம் சொல்லும் போது அதற்கேற்ப மாறுவது தனக்கு பிடிக்கும் என தெரிவித்த விக்ரம், கோப்ரா திரைப்படம் பல்வேறு சவால்களை கடந்து சிரமப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.