சென்னை:தமிழ் சினிமாவின் நடிகரும், இசை அமைப்பாளருமாகவும் வலம் வருபவர், ஹிப் ஹாப் ஆதி. இவர் தனது தனித்துவம் மிக்க இசையால் பல ரசிகர்களைக் கவர்ந்து உள்ளார். இவர் தனது படங்களில் ஆக்ஷன், காமெடி, டயலாக் டெலிவரி என அனைத்திலும் தனது நடிப்பைக் வெளிக்கொணர்ந்து தனக்கென்று தமிழ் திரை உலகில் இளம் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர்.
மேலும், “வாடி புள்ள வாடி”, “இன்று நேற்று நாளை” போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து தனது பின்னணி இசையால் (BGM) ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். குறிப்பாக தனி ஒருவன், ஆம்பள திரைப்படத்தின் பின்னணி இசையானது மிகப்பெரிய வெற்றியை இவருக்கு தேடித் தந்தது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வீரன் என்ற திரைப்படம் வெளியானது. 2024இல் சுந்தர்.சி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அரண்மனை 4 திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விமானத்தில் நேற்று (அக்.12) ஹிப் ஹாப் ஆதி பயணித்துள்ளார். அவர் விமானத்தில் பயணித்த அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.