சென்னை:இயக்குநர் சுதா கொங்கரா தமிழில் இறுதிச் சுற்று, சூரரைப் போற்று, துரோகி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடிகர் சூர்யா, துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
2டி நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்படம் உருவாகிறது. இது ஜி.வி.பிரகாஷுக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா தனது 42வது படமாக சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சூர்யா இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இது அவரது 43வது படம் ஆகும். இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. படத்தின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் அறிமுக வீடியோவின் இறுதியில் புறநானூறு என்று எழுதப்பட்டிருந்தது.