செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'நானே வருவேன்'. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் தற்போது படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதற்கட்டமாக, சிறிதுநேரத்திற்கு முன்பு, 'நானே வருவேன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “வீரா சூரா” என்ற பாடல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாலை 4:40க்கே வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது. புதுப்பேட்டை திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.