சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், லியோ. விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.
வருகிற 19ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவில் இதுவரை இல்லாத வகையில் லியோ படம் சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் காட்சி தொடங்குகிறது.
இந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த நேர்காணலில், “படம் பார்க்க வரும் ரசிகர்கள் படத்தின் முதல் 10 நிமிடத்தை தவறவிட்டு விடாதீர்கள். இதற்காகத்தான் ஓட்டுமொத்த படக்குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளோம். ஒட்டுமொத்த படமும் கஷ்டப்பட்டுதான் எடுத்துள்ளோம்.
ஆனால், முதல் பத்து நிமிட காட்சிகள் மிகவும் முக்கியமானது. நானே திரையரங்குகளில் சென்று எல்லோரும் வந்து விட்டார்களா என்று பார்த்துவிட ஆசையாக உள்ளது” என்றார். அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜின் எல்சியுவில் (லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்) லியோ இணையுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.
இதையும் படிங்க:லியோ பட வெளியீடு; அரசின் கட்டுப்பாடுகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு!