தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் 'வா வரலாம் வா' ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Va Varlam Vaa movie

bigg boss bala: பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள "வா வரலாம் வா" திரைப்படம் டிசம்பர்.1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.bigg boss balaji: Bigg Boss star Balaji Murugadoss debut movie "Vaa Varalaam Vaa" will hit the theaters on December 1.

பாலாஜி முருகதாஸ் நடிக்கும் வா வரலாம் வா டிசம்பர் 1 ரிலீஸ்
பாலாஜி முருகதாஸ் நடிக்கும் வா வரலாம் வா டிசம்பர் 1 ரிலீஸ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 11:09 AM IST

சென்னை:தேவா இசையமைப்பில் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘வா வரலாம் வா’. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டு, அதன் மூலம் பிரபலமானவர், பாலாஜி. இவர் தற்போது மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில், எஸ்.பி.ஆர் தயாரிப்பில் உருவாகியுள்ள வா வரலாம் வா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் கருமேகங்கள் கலைகின்றன பட நாயகி மஹானா சஞ்சீவி கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லனாக "மைம்" கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ நடித்துள்ளார். மேலும் காயத்ரி ரேமா, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன், போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் மற்றும் 40 குழந்தைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: "அவர் வருவாரா?" - கருணாநிதி நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் அஜித்துக்கு அழைப்பு!

இப்படத்திற்கு தேவா இசையமைக்க, கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சித்ரா லக்ஷமணன், வா.கௌதமன், மோகன்.ஜி, தயாரிப்பாளர்கள் என்.விஜயமுரளி, சௌந்தர பாண்டியன் மேலும் வழக்கறிஞர் பாலு, சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், ஜே.எஸ்.கே.கோபி மற்றும் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து கூறினர்.

கானா எட்வின் எழுதிய ஜிலுஜிலுன்னு ஏத்துறியே எனும் கானா பாடலை தேவா பாடியுள்ளார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: ஜோ திரைப்படம் என்னை அழ வைத்தது… இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details