தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சென்னையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ரத்து! - oscar award

சென்னையில் நேற்று நடைபெற இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இசை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ar rahman concert cancel
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி ரத்து

By

Published : Aug 13, 2023, 8:00 AM IST

சென்னை:தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர், இசையமைப்பாளர்‌ ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் தனது இசை ஆளுமையை நிரூபித்தவர். இரண்டு “ஆஸ்கர் விருது” பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்.

மேலும், பல்வேறு நாடுகளில் தனது இசை நிகழ்ச்சிகள் மூலம் இசை ரசிகர்களை மகிழ்வித்து வருபவர். தற்போது இசை அமைப்பாளர்கள் எல்லோரும் தனியாக ஊர், ஊராகச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது “மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 12) சென்னையில் நடைபெற இருந்தது. இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது சென்னையில் பெய்த மழை காரணமாக, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் நிகழ்ச்சியானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, “என் நெருக்கமான நண்பர்களுக்கு, மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. என் அன்பிற்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இதனால் நிகழ்ச்சி நடைபெறும் பனையூர் பகுதி மற்றும் இசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இனி வரும் காலங்களில், நல்ல கட்டமைப்பு வசதி கொண்ட இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்துமாறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால், டிக்கெட் எடுத்தவர்களுக்கு அதே டிக்கெட் மூலம் நிகழ்ச்சியை காண முடியுமா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் டிக்கெட் எடுத்து வந்த ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைவில் அறிவிப்பார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜவான் படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

ABOUT THE AUTHOR

...view details