தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவம்! - American University

கட்டில் திரைப்பட உருவாக்கம் என்னும் நூலின் ஆசிரியரும், அப்படத்தின் இயக்குனருமான இ.வி.கணேஷ் பாபுக்கு அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.

கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவம்!
கட்டில் திரைப்பட உருவாக்கம் நூலுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவம்!

By

Published : Jul 11, 2022, 4:57 PM IST

சென்னை:வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூல்களுக்கான விருதை அறிவித்து, அதற்கான விழா நேற்று (ஜூலை 10) சென்னையில் நடைபெற்றது. இவ்விழா ரவி தமிழ்வாணன், எஸ்பி.பெருமாள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதனிடையே இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கட்டில்’ திரைப்படத்தின் உருவாக்கத்தை, ‘கட்டில் திரைப்பட உருவாக்கம்’ என்னும் நூல் வழியாக, தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு பலராலும் பாராட்டு பெற்று வருகிறது.

மேலும் திரைப்படம் குறித்த இப்படி ஒரு நூல் எங்கும் வெளிவராத நிலையில், புனே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த நூலைப் பார்த்த பிரபல திரைப்பட பேராசிரியர் சமர் நாட்டக்கே மூலம், இந்த நூல் உலகின் பல்வேறு திரைப்பட கல்லூரிகளுக்கு சென்று சேர்ந்திருக்கிறது.

இந்நிலையில் கட்டில் திரைப்பட உருவாக்கம் என்னும் நூலின் ஆசிரியரும், கட்டில் திரைப்படத்தின் இயக்குனருமான இ.வி.கணேஷ்பாபுக்கு நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் விருதை வழங்கி கெளரவித்தார்.

இதையும் படிங்க:தமிழ் சினிமாவில் "சாதி படங்கள் வருவது வேதனை அளிக்கிறது" - நடிகர் ரஞ்சித்

ABOUT THE AUTHOR

...view details