மும்பை : நடிகை இலியானா டி க்ருஸ் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவித்து உள்ளார். கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை இலியானா. கேடி படம் நடிகை இலியானாவுக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுத் தராத போதிலும் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நண்பன் படம் அவரது மார்க்கெட்டை உயர்த்தியது.
நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை இலியானா நடித்து இருந்தார். தனது தனிப்பட்ட விஷயங்களை வெளியே கசிய விடாமல் பார்த்துக் கொள்வதில் கனக்கச்சிதமாக இயங்கி வரும் நடிகை இலியானா தற்போது தன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவலை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் பதிவிட்டு உள்ளார். சிறு குழந்தைகள் அணியும் உடையின் புகைப்படத்தை வெளியிட்ட அவர் அதில் "விரைவில் வா, உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது எனது சிறிய டார்லிங் என இலியான பதிவிட்டு உள்ளார். நடிகை இலியானா வெளியிட்ட புகைப்படத்தில் "அதனால் சாகசம் தொடங்குகிறது" என அச்சிடப்பட்டு உள்ளது.
அதேபோல் "அம்மா" என பொறிக்கப்பட்டு இருந்த செயினை அணிந்து இருக்கும் மற்றொரு புகைப்படத்தையும் நடிகை இலியானா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இலியானாவின் கொடுத்த இன்ப அதிர்ச்சியை கண்டு உறைந்து போன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.