இயக்குநர் ராஜமௌலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து பயணிக்கிறார். இந்நிலையில், இந்தப்படத்தில் பாகுபலியில் இருந்த கட்டப்பா போல் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம். மேலும், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசனை அணுகத் திட்டமிட்டுள்ளாராம், ராஜமௌலி.
ராஜமௌலியுடன் இணைகிறாரா கமல்..? - ராஜமௌலி
டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் கமல்ஹாசனை அணுகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜமௌலியுடன் இணைகிறாரா கமல்..?
ஏற்கெனவே பல திரைப்படங்களில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசன், இப்படி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்பது கேள்விக்குறி தான். கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் 'விக்ரம்' திரைப்படம் வருகிற ஜூன் 3 அன்று வெளியாகிறது. அந்தப்படத்தின் ட்ரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரமாண்டமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அப்டேட் தராவிட்டால் தற்கொலை-பிரபாஸ் ரசிகர் மிரட்டல்..!