சென்னை: ஜீ 5 நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள புதிய இணையத்தொடர்களின் பெயர் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கிருத்திகா உதயநிதி , நடிகர் பிரகாஷ்ராஜ் , நடிகை ராதிகா , நடிகர் விமல், நடிகர் கலையரசன் , இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், வசந்தபாலன், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு இணையத்தொடர்களின் அறிமுகம்: ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ’நிலமெல்லாம் ரத்தம்’, ’அனந்தம்’ , ’Fingertip season 2’ , ’கொலைகாரனின் கைரேகைகள்’ , ’அயலி’ , ’ஐந்தாம் வேதம்’ , ’கார்மேகம்’ , ’தலைமைச் செயலகம்’ , ’பேப்பர் ராக்கெட்’ , ’Five six seven eight’ ஆகிய இணையத்தொடர்களின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டு, தொடரில் நடித்தவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் Zee 5 தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப்பெற்ற படங்கள் மற்றும் இணையத்தொடர்களில் நடித்தவர்கள் மேடையில் கவுரவிக்கப்பட்டனர்.
'பேப்பர் ராக்கெட் ' இணையத்தொடரின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசும்போது, தனது அப்பா, அம்மாவின் வாழ்க்கையிலிருந்து பேப்பர் ராக்கெட் தொடரின் கதையை உருவாக்கியதாகக் கூறினார். கார்மேகம் இணையத்தொடர் மூலம் முதன்முறையாக , இணையத்தொடரில் நடித்துள்ளதாக நடிகை ராதிகா தெரிவித்தார்.