தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து - வைரலாகும் வீடியோ! - விஷால் நடிக்கும் படப்பிடிப்பில் விபத்து

நடிகர் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

"விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து": வைரலாகும் வீடியோ
"விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து": வைரலாகும் வீடியோ

By

Published : Feb 22, 2023, 5:24 PM IST

"விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து": வைரலாகும் வீடியோ

சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக லத்தி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். 'எனிமி’ திரைப்படத்தைத் தயாரித்த மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

த்ரிஷா இல்லைனா நயன்தாரா, AAA படங்களை இயக்கி சர்ச்சை இயக்குனர் என்று பெயரெடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கு வருகிறார். இப்படத்தின் பூஜை கடந்த ஆண்டு நடைபெற்று தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். நடிகை ரிது வர்மா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படம்‌ இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. லாரியை பயன்படுத்தி காட்சி படமாக்கப்பட்ட போது லாரி நிற்காமல் சென்று செட் மீது மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'விடுதலை’ படத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சி கலைஞர் சுரேஷ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தங்கலான் படத்தில் இணைந்த ஆஸ்கர் பட நாயகன்!

ABOUT THE AUTHOR

...view details