தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“சும்மா பிராங்க் பண்ணேன்” இணையத்தில் வைரலான வீடியோவிற்கு நடிகர் விஷால் விளக்கம்! - இளம் பெண்ணுடன் விஷால்

actor vishal video: நடிகர் விஷால் இளம் பெண்ணுடன் வலம்வரும் விடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் அது முற்றிலும் பிராங்க் என விஷால் பதிலளித்துள்ளார்.

“சும்மா பிராங்க் பண்ணேன்” இணையத்தில் வைரலான வீடியோவிற்கு நடிகர் விஷால் விளக்கம்!
“சும்மா பிராங்க் பண்ணேன்” இணையத்தில் வைரலான வீடியோவிற்கு நடிகர் விஷால் விளக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 10:18 PM IST

Updated : Dec 27, 2023, 10:41 PM IST

சென்னை:தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வரும் விஷால் 'செல்லமே' படத்தின் மூலம் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் விஷால் நடித்து வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குநர் ஹரி இயக்கும் 'ரத்னம்' படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஷால் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் என கூறப்பட்டது. இந்த நிலையில், விஷால் இளம் பெண்ணுடன் வெளிநாட்டில் வலம் வரும் வீடியோ நேற்று எக்ஸ் தளத்தில் வெளியாகி வைரலாகியது.

அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவருடன் நடந்து செல்லும் விஷால், தன்னை யாரோ கூப்பிடுகிறார் என திரும்பி பார்க்கையில், ஒருவர் தன்னை வீடியோ எடுப்பதைக் கண்டு, விஷால் தன் முகத்தை மறைத்து வேகமாக ஓடுவது போன்று இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் பெரும் பேசுபொருளாக மாறியது.

மேலும், அந்த விடியோவில் இருக்கும் பெண், விஷாலின் காதலியாக இருக்கலாம் என சிலர் பதிவிட்டு வந்த நிலையில், சிலர் ஏதேனும் படத்துக்கான விளம்பரமாகக்கூட இருக்கலாம் என இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது அந்த வீடியோவிற்கு விஷால் தனது X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “மன்னிக்கவும் நண்பர்களே, சமீபத்தில் வெளியான வீடியோ பற்றிய உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது. இடத்தை பொறுத்தவரை, அந்த வீடியோவில் நான் இருப்பது உண்மைதான். ஆம், நான் நியூயார்க்கில் இருக்கிறேன். இது, ஒவ்வொரு வருடமும் பெரும் சோர்வுக்குப் பின் மனநிம்மதி அடைவதற்கு, என் உறவினர்களுடன் நான் வழக்கமாக தங்கும் இடம்.

கிறுஸ்துமஸ் நாளன்று விளையாட்டிற்காக செய்யப்பட்ட பிராங்க்தான் மற்ற பாதி வீடியோ. இது முழுக்க முழுக்க என் உறவினர்களால் இயக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இப்படி செய்வதால் என்னுள் உள்ள குழந்தைத்தனம் வெளிவந்து, நல்ல உணர்வைத் தருகிறது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அனைவரையும் நேசிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இன்று ஒரே நாளில் 4 திரைப்பிரபலங்கள் மறைவு - திரையுலகினர் வருத்தம்!

Last Updated : Dec 27, 2023, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details