தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திரையரங்குகளில் வெளியான விருமனுக்கு மக்கள் வரவேற்பு - விருமன்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது

திரையரங்குகளில் வெளியானது ’விருமன்’..! : மக்கள் வரவேற்பு
திரையரங்குகளில் வெளியானது ’விருமன்’..! : மக்கள் வரவேற்பு

By

Published : Aug 12, 2022, 4:13 PM IST

’கொம்பன்’ படத்தையடுத்து மீண்டும் இயக்குநர் முத்தையா மற்றும் கார்த்தி கூட்டணி இணைந்துள்ள படம் ’விருமன்’. இப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று(ஆக.12) தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

’கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்குப்பிறகு, கார்த்தி மீண்டும் கிராமத்துப் படத்தில் நடித்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் இப்படத்திற்கு சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்துள்ளது.

ஆனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. காரணம் இயக்குநர் முத்தையாவின், வழக்கம்போல கிராமத்து கதைக்களம் தான். 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்குப்பிறகு கார்த்திக்கு இப்படம் மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டிகளில் வென்ற வீரர்களை வாழ்த்திய பிரபாஸ்..!

ABOUT THE AUTHOR

...view details