சென்னை: சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய படம், விருமன். இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான இப்படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
யுவனின் லேட்டஸ்ட் கிராமிய மனம்.. கஞ்சாப்பூ கண்ணால பாடலின் வீடியோ வெளியானது - kanja poo kannale video song
விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சாப்பூ கண்ணால பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
யுவனின் லேட்டஸ்ட் கிராமிய மனம்.. கஞ்சாப்பூ கண்ணால பாடலின் வீடியோ வெளியானது
முத்தையாவின் கிராமிய திரைக்கதையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேநேரம் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே வெளியான “கஞ்சாப்பூ கண்ணால” என்னும் பாடல் பல தரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்தது. தற்போது இப்பாடலின் ஒரிஜினல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: விருமன் பட நாயகி அதிதி ஷங்கர் புகைப்படத்தொகுப்பு
Last Updated : Aug 26, 2022, 1:06 PM IST