சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் சமீபத்தில் நடிகர் விக்ரம் தனி நாயகனாக நடித்த படங்கள் சரியாக போகவில்லை என ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் பகிரப்பட்டன.
இந்நிலையில், தற்போது இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் 'தங்கலான்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. முன்னதாக இப்படத்தின் கிளிம்ப்ஸ், நடிகர் விக்கிரம் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. அதில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் 'தங்கலான்' படம் குறித்த அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் பாக்ஸராக நடித்துள்ள 'ஆண்டனி' படத்தின் டீசர் வெளியானது!