தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விக்ரம் பிரபுவின் 'இரத்தமும் சதையும்' டைட்டில் லுக் வெளியானது! - விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படம்

விக்ரம் பிரபு நடிப்பில் 'இரத்தமும் சதையும்' திரைப்பட டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபுவின் ‘இரத்தமும் சதையும்’ டைட்டில் லுக் வெளியானது..!
விக்ரம் பிரபுவின் ‘இரத்தமும் சதையும்’ டைட்டில் லுக் வெளியானது..!

By

Published : May 24, 2022, 8:24 PM IST

கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதையை எழுதி, அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்குகிறார்.

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. உடலை வருத்தி தன்னை அக்கதாபாத்திரமாக மாற்றிகொண்டு வாழ்ந்திருந்தார், விக்ரம் பிரபு.

தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு 'இரத்தமும் சதையும்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் 'இரத்தமும் சதையும்' படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு, பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு 'சர்ப்ரைஸ்' தந்த கமல்..!

ABOUT THE AUTHOR

...view details