தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Vikram promo: 'விக்ரமை அழைக்கும் பஞ்சதந்திரம் கேங்..!' : கலக்கல் புரொமோ - கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிற ஜூன் 3அன்று வெளியாகவுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் புரொமோ அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

Vikram promo: ’விக்ரமை அழைக்கும் பஞ்சதந்திரம் கேங்..!’ : கலக்கல் புரோமோ
Vikram promo: ’விக்ரமை அழைக்கும் பஞ்சதந்திரம் கேங்..!’ : கலக்கல் புரோமோ

By

Published : May 27, 2022, 6:08 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தின் புரொமோஷன் களைகட்டியுள்ளது. ஒரு பக்கம் டெல்லி, கொச்சின், மலேசியா எனப் புரொமோஷன்களுக்கான பயணங்களை மேற்கொண்டு வருகிறார், நடிகர் கமல். இந்நிலையில், அப்படத்தின் புக்கிங் வருகிற 29ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்பதை அறிவிக்கும் வகையில் புரொமோ ஒன்று யூ-ட்யூபில் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ’பஞ்சதந்திரம்’ படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், அப்படத்தின் புகழ்பெற்ற ’கான்ஃபரன்ஸ் கால்’ காட்சியைப் போல் ’விக்ரம்’ படத்தைப் பற்றி பேசுவதாக காணொலி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தக் காணொலியின் இறுதியில் விக்ரமையும் கான்ஃபரன்ஸ் காலில் இணைப்பதாக காணொலி முடிகிறது. இத்தகைய கலக்கல் புரொமோ மூலம் டிக்கெட் புக்கிங் தேதியை அறிவித்துள்ளனர், ’விக்ரம்’ படக்குழுவினர்.

இதையும் படிங்க: 'நடிகர் அவதாரம் எடுத்த பாஜக அண்ணாமலை..!' : ரூ.1 மட்டுமே சம்பளம்

ABOUT THE AUTHOR

...view details