தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தீவிர உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் விக்ரம்

நடிகர் விக்ரம் தற்போது தீவிர உணவுக் கட்டுப்பாடுகளில் இருந்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தீவிர உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் விக்ரம்
தீவிர உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கும் விக்ரம்

By

Published : Aug 27, 2022, 10:28 PM IST

நடிகர் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’துருவ நட்சத்திரம்’ படத்தின் கதி என்னவென்றே தெரியவில்லை. இந்நிலையில், இவர் நடிப்பில் கோப்ரா படம் இம்மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் நடிக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

இதனிடையே கோப்ரா படத்தின் பிரமோஷனுக்காக ஊர் ஊராக பம்பரமாக சுழன்று வருகிறார் விக்ரம். ஆனால் இப்போதைக்கு அவருக்குக் கண்டிப்பாக மூன்று மாதங்கள் ஓய்வு தேவை என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் பா.ரஞ்சித் படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைக்கச் சொல்லி விட்டாராம்.

மேலும், விக்ரம் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் வீட்டிற்குள்ளே சுற்றி வந்து நடைப்பயிற்சி செய்கிறாராம். உணவுப் பழக்கத்திலும் பல மாறுதல்கள் அவரிடம் வந்துவிட்டன. டயட்டிலும் மெனக்கெடுகிறார். அசைவ உணவுகளை அதிகமாக சூப் வடிவத்தில் மட்டுமே இப்போது எடுத்துக் கொள்றார் என்று தகவல் வந்துள்ளது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவ்... பிரியா பவானி சங்கர் வீடியோ...

ABOUT THE AUTHOR

...view details