தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கடைசி விவசாயி' இயக்குநருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி! - kadaisi vivasayi

இயக்குநர் மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த 'கடைசி விவசாயி' வெற்றிக்குப் பின் மீண்டும் இருவரும் இணையவுள்ளனர்.

விஜய் சேதுபதி
’கடைசி விவசாயி’ இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

By

Published : Apr 1, 2023, 12:51 PM IST

சென்னை: எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று இருக்கும் பலருக்கு நடுவில் இப்படித் தான் படம் எடுப்பேன் என்று இருக்கும் சில இயக்குநர்களில், இயக்குநர் மணிகண்டனும் ஒருவர். இவரது காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தேசிய விருது பெற்ற இந்த வித்தைக்காரர் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் ஒரு எதார்த்தமான படமாக இது அமைந்தது. விஜய் சேதுபதி ஒரு முன்னணி நடிகராக இருந்தாலும், இந்திய அளவில் பேசப்படும் நடிகராக இருந்தாலும் கடைசி விவசாயி படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் வேறு யாருமே செய்யத் தயங்குவது. இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி, மணிகண்டன் கூட்டணி இணையவுள்ளது.

ஆனால் இந்த முறை ஓடிடியில். இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட் ஸ்டார் அடுத்துத் தயாரிக்கும் புதிய வெப் தொடரில் இருவரும் இணைகின்றனர். இந்திய அளவில் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ள விஜய் சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் அவர் நடிப்பது இதுவே முதல் முறையாகும். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் பல மடங்கு எகிற வைத்திருக்கிறது.

இந்தப் புதிய ஹாட் ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. 7C’s Entertainment Pvt Ltd (P. ArumugaKumar) தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு, இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். B.அஜித் குமார் படத்தின் எடிட்டராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.

வெப் சீரிஸின் ஒலி வடிவமைப்பை அஜயன் K. அடாத் மற்றும் ஆடை வடிவமைப்பை கவிதா கையாளுகின்றனர். இந்த வெப் சீரிஸில் பங்கு பெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இயக்குநர் மணிகண்டன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் இதுவரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுள்ளது. ஆகவே, தற்போது முதல் முறையாக ஓடிடியில் இருவரும் இணைந்துள்ளதால் இது எந்த மாதிரியான படைப்பாக வரவுள்ளது என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:பட்டையை கிளப்பும் 'மைனரு வேட்டி கட்டி' பாட்டு.. எழுதியவர் யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details