தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய் சேதுபதி - மிஷ்கின் இணையும் ட்ரெயின் - பூஜையுடன் தொடக்கம்! - kollywood updates

Train Movie: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’ட்ரெயின்’ (train) படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

ட்ரெயின்
ட்ரெயின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 3:11 PM IST

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களின் மூலம் நல்ல நடிகர் என்று பெயர் பெற்றவர். சமீப காலமாக வில்லனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இந்த முறை விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குநர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார். அந்த படத்திற்கு ட்ரெயின் என்று பெயரிடப்பட்டுள்ளது. ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குநர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை V.மாயபாண்டி மேற்கொள்கிறார். ட்ரெயின் (Train) படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது.

ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ட்ரெயின் படத்தின் பூஜையில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அன்புச்செழியன், கல்யாணம் (Knack Studios) ஆகியோர் கலந்து கொண்டனர். வித்தியாசமான படங்களை எடுக்கும் மிஷ்கின் நடிப்பில் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பிருத்விராஜின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details