தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி! - Akshay Kumar

EMAIL: S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள 'இமெயில்’ திரைப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி இன்று(டிச.27) வெளியிட்டார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

EMAIL
'இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 8:25 PM IST

சென்னை: எஸ்.ஆர்.ஃப்லிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடித்துள்ளார். கதாநாயகனாக ‘முருகா’ படத்தில் நடித்த அசோக்குமார் நடித்துள்ளார். போஜ்புரி மற்றும் இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ, ஆதவ் பாலாஜி, அக்ஷய் குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இதன் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் அமீர் வெளியிட்டார். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் டீசரை இன்று (டிச.27) வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான S.R.ராஜன், ஆதவ் பாலாஜி, மதுராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கு பெற்றனர்.

இந்த டீசரை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், அவர்களுக்கு முத்தங்களையும் பரிசளித்தார். ஆன்லைன் விளையாட்டு மோசடியை அம்பலப்படுத்தும் வகையிலும், அதேநேரம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும், பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க, திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார்.

கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன், இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார், இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். விரைவில், இப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகி உள்ளது.

இதையும் படிங்க:சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய சூர்யா..! அலப்பறை கிளப்பிய அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details