தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய் - லோகேஷ் கூட்டணியில் 'Thalapathy 67' பூஜையுடன் துவக்கம்! - thalapathi 67 promo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

விஜய் - லோகேஷ் கூட்டணியில் 'தளபதி 67' பூஜையுடன் துவக்கம்
விஜய் - லோகேஷ் கூட்டணியில் 'தளபதி 67' பூஜையுடன் துவக்கம்

By

Published : Dec 5, 2022, 1:21 PM IST

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணி இணையவுள்ளதாகப் பேசப்பட்டது. இயக்குனர் லோகேஷ் கனகராஜும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிகர் விஜய் உடனான கூட்டணி குறித்து உறுதிப்படுத்தினார். இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பூஜை இன்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்திற்குத் தற்காலிகமாக 'தளபதி 67' என தலைப்பிடப்பட்டுள்ளது. பட அறிவிப்பு டீசரின் படப்பிடிப்பு பிரசாத் லேப்பில் நாளை முதல் 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மேலும் டீசர் படப்பிடிப்புக்காக 2 செட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

'தளபதி 67' 'எல்சியு (lokesh cinematic universe)'வுடன் தொடர்புடையதா அல்லது தனிக்கதையா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: 'தீ.. தளபதி...' வெளியானது வாரிசு படத்தின் 2ஆவது பாடல்

ABOUT THE AUTHOR

...view details