தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரின்ஸ் படத்தால் விஜய் ரசிகர்கள் கலக்கம் - என்னவாம்?! - prince movie review

தீபாவளிப்பண்டிகையினையொட்டி வெளியான பிரின்ஸ் திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இது மற்றொரு தமிழ், தெலுங்கு பை -லிங்குவலான வாரிசு படத்திலும் எதிரொலிக்கும் எனக்கூறப்படுகிறது.

சொதப்பிய பிரின்ஸ் கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்!
சொதப்பிய பிரின்ஸ் கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்!

By

Published : Oct 21, 2022, 5:09 PM IST

சென்னை: தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம், பிரின்ஸ். இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம்‌ தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார்‌ 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் வழக்கமான‌ காமெடி மற்றும் காதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் காலை படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் கலவையான பதிவுகளே நிறைந்துள்ளன. இதனால் தொடர்ந்து டாக்டர், டான் என ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயன் இம்முறை சாதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனுடன் வெளியான கார்த்தியின் சர்தார் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க தெலுங்கு இயக்குநரின் படத்தில் நடித்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் சொதப்பியதால், விஜய் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏனென்றால் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தான், விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஏற்கெனவே இப்படத்தின்‌ பல்வேறு காட்சிகள் இணையதளத்தில் லீக்காகியுள்ளன. இதனால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து காமெடி மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

இதையும் படிங்க: மாஸ் காட்டிய ’மைக்கேல்’ படத்தின் டீசர்..!

ABOUT THE AUTHOR

...view details