தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜய்தேவரகொண்டாவின் 'துணிச்சல்மிகு' பட போஸ்டர்! - Vijay Deverakonda latest news

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் ‘லிகர்’ திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

வைரலாகும் விஜய்தேவர்கொண்டாவின் துணிச்சல் மிகு பட போஸ்டர்
வைரலாகும் விஜய்தேவர்கொண்டாவின் துணிச்சல் மிகு பட போஸ்டர்

By

Published : Jul 2, 2022, 7:52 PM IST

ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் பான் இந்தியத் திரைப்படமான 'லிகர்' படத்திலிருந்து போஸ்டர் ஒன்றை துணிச்சலாக இணையத்தில் அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் முழுநிர்வாணமாக நிற்கும் விஜய்தேவரகொண்டா மலர் கொத்துகளை வைத்து தனது ஆண் பாகங்களை மறைப்பது போல், அந்தப்போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஜய்தேவரகொண்டாவின் 'துணிச்சல்மிகு' பட போஸ்டர்!

இப்படியான போஸ்டர்கள் திரையுலகிற்கு புதிதல்ல. ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் அமிர் கான் நடிப்பில் வெளியான 'பிகே’ பட போஸ்டரில் அமிர் கான் நிர்வாணமாக நின்று, தன் ஆண் பாகங்களை தேசியக்கொடி வைத்து மறைப்பது போல் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பின் அது சர்ச்சையானதும், தேசியக்கொடிக்கு பதில் ரேடியோ பெட்டியை வைத்து மறைப்பதுபோல் பின் அது மாற்றியமைக்கப்பட்டது.

கோவிட் பாதிப்புகளால் தடையான ‘லிகர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விரைவாக நடந்து முடியும் தருவாயிலுள்ளது. மேலும், இந்தப்படம் வருகிற செப்டம்பர் 9 முதல் உலகெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் குத்துச்சண்டை சாம்பவான் மைக் டைசன் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளியானது 'ஜீவி 2' டீசர் !

ABOUT THE AUTHOR

...view details