தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'செஸ் ஒலிம்பியாட்' போட்டியின் தொடக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்! - விக்னேஷ் சிவன்

விரைவில் நடைபெறவிருக்கும் ’செஸ் ஒலிம்பியாட்’ போட்டியின் தொடக்க விழாவை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.

'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்!
'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடக்க விழாவை இயக்கும் விக்னேஷ் சிவன்!

By

Published : Jun 30, 2022, 9:58 PM IST

மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கான தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அந்த விழாவை தமிழ்த்திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைக்கிறார் என்று பேசப்படுகிறது.

மேலும், விக்னேஷ் சிவனுக்கு இதற்கான சம்பளமாக சில கோடிகள் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடக்கவிருக்கும் இந்த ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் இரண்டு பேரின் இசை நிகழ்ச்சியை நடத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூடுதல் தகவல் வந்துள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, தங்களது திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது தொழிலில் கவனம் செலுத்தி வருகின்றனர். நயன்தாராவும் தனது படங்களின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். மறுபக்கம், விக்னேஷ் சிவன் இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித்தை வைத்து தான் இயக்கவுள்ள படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்த உள்ளாராம்.

இதையும் படிங்க: நடிகர் கமலுக்கு கோல்டன் விசா!

ABOUT THE AUTHOR

...view details