தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் விதார்த் நடிக்கும் 'சைக்கோ - திரில்லர்' திரைப்படம்! - விதார்த் நடிக்கும் புதிய படம்

நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்கவிழா இன்று(ஜூலை 1) சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

நடிகர் விதார்த் நடிக்கும் ‘சைக்கோ - ட்ரில்லர்’ திரைப்படம்..!
நடிகர் விதார்த் நடிக்கும் ‘சைக்கோ - ட்ரில்லர்’ திரைப்படம்..!

By

Published : Jul 1, 2022, 4:03 PM IST

கிரினேடிவ் குழுமத்தைச் சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார்.

இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத, ஒளிப்பதிவை எஸ். ஆர். சதீஷ்குமார் மேற்கொள்கிறார். பின்னணியிசைக்கும் முக்கியத்துவம் உள்ள இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார்.

'டான்', ‘சாணிக் காயிதம்’ போன்ற படங்களில் பணியாற்றிய நாகூரான் ராமச்சந்திரன் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை கையாள, சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைக்க இருக்கிறார். படத்தில் நடிக்க இருக்கும் நாயகி மற்றும் வில்லன் நடிகருக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும், இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ’கிரினேடிவ் பிலிம்ஸ்’ படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிடப்படாத முதல் படைப்பான இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று(ஜூலை 1) சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பட குழுவினருடன் நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என். ராகவன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழில் தயாராகும் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான சைக்கோ திரில்லர் திரைப்படம் இது என்பதால், தொடக்க விழாவின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விதார்த் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான ’பயணிகளின் கவனத்திற்கு’ திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டூப் இல்லாமல் அந்தரத்தில் நடித்த ’கேப்டன் விஜயகாந்த்’; ஏவிஎம் வெளியிட்ட வீடியோ வைரல்!!

ABOUT THE AUTHOR

...view details