தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'வெந்து தணிந்தது காடு' - ஆடியோ வெளியீட்டுக்குத் தயாராகும் அரங்கம்! - சிலம்பரசன்

'வெந்து தணிந்தது காடு' படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான செட் அமைக்கும் பணிகளை தயாரிப்பாளர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காணொலியாகப் பதிவிட்டுள்ளார்.

’வெந்து தணிந்தது காடு’ ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகும் அரங்கம்
’வெந்து தணிந்தது காடு’ ஆடியோ வெளியீட்டுக்கு தயாராகும் அரங்கம்

By

Published : Aug 30, 2022, 7:15 PM IST

வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. இதன் செட் அமைக்கும் பணிகளை தயாரிப்பாளர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் காணொலியாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதற்காக வித்தியாசமான அழைப்பிதழும் வெளியாகி வைரலாகி உள்ளது.செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான 2 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படத்திற்குப் பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் இணைவதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

'வெந்து தணிந்தது காடு' - ஆடியோ வெளியீட்டுக்குத் தயாராகும் அரங்கம்!

இதையும் படிங்க:கோப்ரா பட நாயகிகளுடன் விக்ரமின் ஜாலியான கலந்துரையாடல்

ABOUT THE AUTHOR

...view details