தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'வெந்து தணிந்தது காடு' டப்பிங் பணிகளை முடித்த சிம்பு! - வெந்து தணிந்தது காடு

நடிகர் சிம்பு நடித்து அடுத்து வெளிவரவுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டப்பிங் வேலையை முடித்துள்ளார்.

'வெந்து தணிந்தது காடு' டப்பிங் முடித்த சிம்பு!
'வெந்து தணிந்தது காடு' டப்பிங் முடித்த சிம்பு!

By

Published : Jul 29, 2022, 7:21 PM IST

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த ஆக்‌ஷன் - த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது. அவரது வாழ்க்கை மும்பைக்குச் சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தைச் சந்திக்கிறது. படத்தின் பெரும்பகுதி திருச்செந்தூர், சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் சிலம்பரசனின் காதலியாக சித்தி இதானி நடிக்கிறார். நீரஜ் மாதவ் (ஃபேமிலி மேன் புகழ்), ராதிகா சரத்குமார் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்காக டப்பிங் பணியை நடிகர் சிம்பு முடித்துவிட்டார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'வெந்து தணிந்தது காடு' டப்பிங் முடித்த சிம்பு!

இதையும் படிங்க: அருள்நிதி நடிக்கும் 'டைரி' படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு!


ABOUT THE AUTHOR

...view details