தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2022, 5:27 PM IST

ETV Bharat / entertainment

வெளியானது 'வாரிசு' 3rd Look!

விஜய் நடிக்கும் ’வாரிசு’ படத்தின் 3rd லுக் வெளியாகியுள்ளது.

வெளியானது ’வாரிசு’ தெர்ட் லுக்
வெளியானது ’வாரிசு’ தெர்ட் லுக்

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு 'வாரிசு' என தலைப்பு வைத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று, காலை 11 மணிக்கு 'வாரிசு' திரைப்படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது 'வாரிசு' படத்தின் 3rd லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜயின் பிறந்தநாளான இன்று அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிடுவது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.'வாரிசு' திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். குடும்பப் பின்னணி கொண்ட திரைக்கதையில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பல "வாரிசு"களுக்கு மத்தியில் நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய்!

ABOUT THE AUTHOR

...view details