நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு ‘வாரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6:01க்கு அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, வெளியான ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சேர் செய்தும் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், அப்படக்குழுவினர் அடுத்தடுத்த அப்டேட்களை அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். விஜய்யின் பிறந்த நாளான நாளை காலை 11:44 அன்று ‘வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் வெளியிடவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து மாலை 17:02 மணிக்கு அப்படத்தின் ’தேர்டு லுக்’ வெளியிடப்படவுள்ளதாகவும் அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.
விஜய்யின் பிறந்த நாளன்று கிடைத்த இந்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் கல்லூரி மாணவனாகிறாரா சிவகார்த்திகேயன்..?!