தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திரையரங்குகளில் வசூலை வாரிக்குவிக்கும் வாரிசு - superstar controversy

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் 7 நாட்களில் ரூ.210 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வாரிசு
வாரிசு

By

Published : Jan 18, 2023, 1:09 PM IST

Updated : Jan 18, 2023, 1:14 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜயின் வாரிசு படமும், அஜித்குமாரின் துணிவு படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இருவரது ரசிகர்களும் திரையரங்குகளில் குவிந்துவருவதால், கடந்த ஒரு வாரமாக திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

வம்சி படிபள்ளி இயக்கிய வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். வாரிசு திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வாரிசு படத்தின் திரைக்கதை நாடகம் போல் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 7 நாள்களில் 210 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ’ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "ஜெயிலர்" படத்தில் "புஷ்பா" வில்லன் - மிரட்டல் தோற்றம்

Last Updated : Jan 18, 2023, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details