தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தமிழ் ரசிகர்கள் என்னை மறக்கவில்லை - வரலட்சுமி சரத்குமார் நெகிழ்ச்சி!

கொன்றால் பாவம் திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னை தமிழ் ரசிகர்கள் மறக்காமல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் ரசிகர்கள் என்னை மறக்கவில்லை - வரலட்சுமி சரத்குமார் நெகிழ்ச்சி!
தமிழ் ரசிகர்கள் என்னை மறக்கவில்லை - வரலட்சுமி சரத்குமார் நெகிழ்ச்சி!

By

Published : Mar 14, 2023, 8:29 PM IST

சென்னை:கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம், கராலா ராத்ரி (Karaala Ratri). இந்த திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘கொன்றால் பாவம்’ என்ற பெயரில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக இப்படம் ‘அனகானகா ஓ அதீதி’ (Anaganaga O Athidhi) என்ற பெயரில் தெலுங்கில் நேரடியாக ஆஹா தெலுங்கு ஓடிடி தளத்தில் வெளியானது.

கொன்றால் பாவம் திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி

இவ்வாறு கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது தமிழில் வெளியான நிலையில், தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், செண்ட்ராயன், யாசர், டிஎஸ்ஆர் சீனிவாசன், தங்கதுரை, கவிதா பாரதி மற்றும் கல்யாணி மாதவி உள்ளிட்ட பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

செழியனின் ஒளிப்பதிவில் உருவான இப்படத்திற்கு, சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். இந்த நிலையில் கொன்றால் பாவம் திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று (மார்ச் 14) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் தயாள் பத்மநாபன், நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி, செண்ட்ராயன், ஒளிப்பதிவாளர் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து விழாவில் பேசிய ஒளிப்பதிவாளர் செழியன், “விமர்சனம் செய்பவர்கள் மீது பல விமர்சனங்கள் வந்தாலும், நல்ல திரைப்படத்தை அவர்கள் பாராட்டத் தவறுவதில்லை. அந்த அளவுக்கு நடிப்பு முதல் கேமரா ஒர்க் வரை தனித்தனியாக பார்த்து பாராட்டுகின்றனர். எனது ஒளிப்பதிவு குறித்து தனியாக பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சந்தோஷ் பிரதாப். “இந்த படம் உங்களின் விமர்சனத்தால் வெற்றி பெற்றுள்ளது. இயக்குனருக்கு நன்றி.‌ வளர்ந்து வரும் நடிகருக்கு இதுபோன்ற படங்கள் அமைவது மகிழ்ச்சியானது. இந்தத் திரைப்படத்தில் அனைத்துமே முழுமையாக அமைந்தது. அனைவரும் முழு உழைப்பை கொடுத்துள்ளனர். திடீரென தோல்வி வரும்போது, நமக்கு ஒரு குழப்பம் வரும். இதுபோன்ற படங்கள்தான் நம்பிக்கை கொடுக்கும். எனது அடுத்த படத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை, இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன். கொன்றால் பாவம் எனக்கு நிச்சயம் மறக்க முடியாத படம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சார்லி, “இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சொல்லாமல் இருந்த அனைவருக்கும் நன்றி. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி, விருதை இந்தியாவுக்கு சமர்ப்பிப்பதாகச் சொன்னார். அவருக்கு போனில் மெசேஜ் மூலம் நன்றி சொன்னேன். அடுத்த சில மணி நேரத்திலேயே நன்றி சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினார். இது நட்சத்திரங்கள் சேர்ந்த சினிமா அல்ல. உழைப்பு சேர்ந்த சினிமா” என கூறினார்.

மேலும் விழாவில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், “முதலில் நான் விமர்சகர்கள் மீது கோபத்தில் இருந்தேன்‌. இந்த திரைப்படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு பார்த்து மாறிவிட்டேன். தமிழ் சினிமாவில் என்னை மிஸ் செய்வதாகச் சொன்னார்கள். இது எனக்கு உந்துதலாக இருந்தது. யாரும் என்னை மறக்கவில்லை என்று மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படமும், எனது நடிப்பும் பாராட்டப்பட்டது” என்றார்.

இதையும் படிங்க:இசையமைத்த முதல் படம் வெளியாகவில்லை; ஆனால் இன்று ஆஸ்கர் நாயகன்.. கீரவாணி கடந்து வந்த பாதை!

ABOUT THE AUTHOR

...view details