சென்னை: இயக்குனர் கிட்டு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், சல்லியர்கள். தமிழீழ விடுதலைப் போரில் பிரபாகரனின் விடுதலை புலிகள் படையில் போராளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர்களை பற்றிய படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் சல்லியர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (நவ 26) சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு, கருணாஸ், கென் கருணாஸ், சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி, சீனு ராமசாமி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய கென் கருணாஸ், “இப்படத்தில் நானும் எனது நண்பர் ஈஸ்வரும் இணைந்து இசை அமைத்துள்ளோம். இதில் முதன்மை இசை அமைப்பாளர் ஈஸ்வர்தான். இத்திரைப்படம் எங்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. என்னவென்றே புரியவில்லை.